2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பாடசாலை மாணவி உட்பட மூவருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஜனவரி 04 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவ பொதுசுகாதா வைத்திய அதிகரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவி ஒருவர் உட்பட மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

டிக்கோயா பீரட் தோட்டத்தில், பெண்ணொருவருக்கும்  அவரது 12 வயது மகளுக்குமே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

12 வயது சிறுமி, புளியாவத்தைப் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விபயின்று வருவதுடன், குறித்தப் பெண், 28,29,30 ஆகிய திகதிகளில், சக தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலைமலையில் கொழுந்துப் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், பொகவந்தலா நோத்கோ பகுதியில் 47 வயது பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர் கொழும்பிலிருந்து வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பீரட் தோட்டத்தில் இதுவரை ஆறு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (4) வெளியானபோதே, இருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பீரட் தோட்டத்தில் பூசகர் ஒருவர் உட்பட  12 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான மூவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X