சிவாணி ஸ்ரீ / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை, மாவனல்ல வலயக்கல்வி காரியாலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்தான கலந்துரையாடல் ஒன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், நேற்று (24) கேகாலை சனச பல்கலைகழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து, பாடசாலை அதிபர்கள், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதற்கு பதிலளித்து கருத்துத் தெரிவித்த மாகாண ஆளுநர்,
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஏற்பட்டுவரும் ஆசிரியர் பற்றாக்குறை, வளங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட ஏனைய அனைத்துப் பிரச்சினைகளையும் படிப் படியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago