Editorial / 2024 ஜனவரி 21 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஏழு நிகழ்வுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத்தினால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு மத்திய மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையின் பிரகாரம் முதலாம் தவணையில் மூன்று விழாக்களும் இரண்டாம் தவணைகளில் நான்கு விழாக்களும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக ஏதேனும் விழா நடத்தினால் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் தவணையில் மாணவர்களுக்கான புதுமுக விழா, சுதந்திர விழா, இல்லங்களுக்கு இடையேயான தடகள போட்டியும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளில் கல்விச் சுற்றுலா, கலை விழா, ஆண்டு பரிசளிப்பு விழா நடத்தவும் அனுமதி வழங்கப்படும்.
இசை நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் பெற்றோரிடம் வரம்பில்லாமல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
16 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago