2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாடசாலையின் களஞ்சிய அறையில் தீ; ஆவணங்கள் தீக்கிரை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், பா.திருஞானம்

 

நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தமிழ் வித்தியாலயத்தில், இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தால், வித்தியாலயத்தின்  களஞ்சிய அறை முற்றாக பாதிப்புக்கு   உள்ளாகியுள்ளதென, கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தால், களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள் என்பன, தீக்கிரையாகியுள்ளனவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார ஒழுக்குக் காரணமாகவே தீ விபத்து சம்பவித்துள்ளதெனவும் தீ விபத்துத் தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர.இராஜாராம் பாடசாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டதுடன்,   நுவரெலியா கல்வித் திணைகளத்துடன் தொடர்புகொண்டு, பாடசாலையின் களஞ்சிய அறையை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்களையும்  மேற்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .