2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பாடசாலையில் வழுக்கி விழுந்து மாணவன் மரணம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை - கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

பாடசாலை இடைவேளை நேரத்தில் நேற்று சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது, பந்தை பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்து, பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் அவரது தலை மோதியுள்ளது. இதனால் அவரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X