Editorial / 2025 மார்ச் 21 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, வியாழக்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன்-குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை பாதிரியார் ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், விபத்தில் பாதிரியார் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணையில், பாதிரியார் தனது மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் கவனக்குறைவாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago