2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

பாதணிக்குரிய இளைஞன் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2021 நவம்பர் 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

நோர்வூட்-  நிவ்வெளிகம காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து இளைஞனின் சடலம் ஒன்று, மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 இன்று மாலை 3  மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சடலமாக மீட்கப்பட்ட நபர் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்ததை சேர்ந்த 20வயதுடைய சரத்குமார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இளைஞனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன்  வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம -காசல்ரீ
நீர்தேக்கத்தின் அருகாமையில் ஆண் ஒருவரினது, ஒரு ஜோடி பாதணியும் ஸ்மாட் போண் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த பொருள்கள்  இன்று (17)  காலை 08.30 மணியளவில்
கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இன்று காலை நிவ்வெளிகம பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு சிறுமிகள் முகம் கழுவதற்காக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் வந்துள்ளனர்.

 இதன் போது, குறித்த பொருள்களைக் கண்ட சிறுமிகள், கொழும்பிலுள்ள தனது தந்தைக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த  தந்தை,  தொலைபேசி ஊடாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார்,  காசல்ரீ நீர்தேக்கத்தில் தேடும் பணியை முன்னெடுத்த போதே, குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .