2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்து தருமாறு கோரிக்கை

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

 

அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள 18 குடும்பங்களும், பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்து தருமாறு, மலையக பிரதிநிதிகளிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படித் தோட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் குடியிருக்கும் லயன் வீட்டுத் தொகுதியானது, மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

மழைக் காலங்களில்  குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் தாம், மீண்டும் அக்குடியிருப்புகளிலேயே தங்க வைக்கப்படுவதாக அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், கடந்த இரண்டு வருடங்களாக அச்சத்துடனேயே பொழுதை கழிப்பதாக தெரிவித்துள்ள அம்மக்கள், எந்த நேரத்தில் மண்சரிந்து வரும் என்று தெரியாத நிலையிலேயே தாம் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த அரசாங்கமானது,  வீடுகளை அமைத்து  தருவதாகக் கூறி 2015ஆம் ஆண்டு வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டியப் போதிலும் இதுவரை வீடுகள் நிர்மாணிக்கப்படவிலை என்று கூறியுள்ள அவர்கள், இவ்விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு, மனுவொன்றை கையளித்துள்ள போதிலும் வீடமைப்புத் தொடர்பில் அவரும் கண்டுக்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே தமக்கு வெகுவிரைவில் வீடுகளை அமைத்து தருவதற்கு, உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அம்மக்கள் மேலும் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .