Kogilavani / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நல்லதண்ணி நகருக்கூடாக வாகனங்களைச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ள வாகன சாரதிகள், நல்லதண்ணி நகரின் பிரதான வீதியில், வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தனர்.
நகரின் பிரதான வீதியின் இரு மருங்கிலும், வர்த்தக நிலையத்தினர் ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிவித்த வாகன சாரதிகள், இதன் காரணமாக போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் மாத்திரமே தரித்து நிறுத்தமுடியும் என உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால், நல்லதண்ணிக்கு வரும் ஏனைய வாகனங்கள, திருப்பிக்கொள்ளக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென, வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நகரின் பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள இவ்வாறான தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago