2025 மே 03, சனிக்கிழமை

பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

Editorial   / 2024 ஜூன் 02 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் உடுவர நில்போவில பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (2) பிற்பகல், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மண்சரிவுக்குப் பின்னர், வீதியோரத்தில் குவிக்கப்பட்டிருந்த மண் திட்டில் மோதுண்டே அந்த பஸ் நின்றுள்ளது. அவ்வாறு மோதி நிற்காமல் விட்டிருந்தால்,   பதுலுஓயாவில் கவிழ்ந்து பாரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்லந்தவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பண்டாரவளை டிப்போவிற்கு சொந்தமான  பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உடுவரை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X