2026 மே 09, சனிக்கிழமை

பாரிய மரநடுகைத் திட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளை மய்யப்படுத்தி, பாரிய மர நடுகைத் திட்டமொன்று, நடைமுறைப்படுத்தப்பட்டு வரவுள்ளது.

சப்ரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களம், இலங்கை வங்கியின் சப்ரகமுவ மாகாண பிரிவு ஆகியன, மகாவலி அதிகார சபை, வெலிபல் ஆகிய அமைப்புகள் இணைந்தே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதற்கிணங்க, இத்திட்டம் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் 10 - 50 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உடவளவ கனிஷ்ட வித்தியாலயம், காவத்தை முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றிலும், கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை மாலிகாதென்ன அட்டம்பிட்டிய ஆகிய பாடசாலைகளிலும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்ட முயற்சியாக, ஏனைய பாடசாலைகளிலும் நடை முறைப்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம், 38,000 மூலிகை, பழ வகை மரங்கள் நாட்டி வைக்கப்படவுள்ளன.

இவற்றில், 28,000 மரங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ளதாக இலங்கை வங்கியின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .