Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை, பார்க் தோட்டத்தில், இன்று(1) காலை 7.30 மணியலவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடியிருப்பொன்று, பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக, கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்தினால், மேற்படி குடியிருப்பில் வசித்து வந்த எட்டு பேர் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆறு குடும்பங்கள் வசிக்கும் 20ஆம் இலக்க லயன் குடியிருப்புத் தொகுதியல், கடைசி வீடே, பகுதியளவில் எரிந்துள்ளது.
தீ பரவுவதை அறிந்த அயலவர்கள், தீயை பரவவிடாமல் தண்ணீர் பாய்ச்சி கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததால், ஏனைய 5 வீடுகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கந்தப்பளை பொலிஸார், நுவரெலியா பிரதேசசபையின் தவிசாளர் வேலு யோகராஜ் உள்ளிட்ட பலர் ஸ்தலத்துக்கு வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டனர்.
மின்சார ஒழுக்கு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், நிர்க்கதியாகியுள்ள நிலையில், அவர்களுக்கான உதவிகளை பிரதேசசபை தவிசாளர் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
45 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago
6 hours ago