2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பாற் பண்ணையாளர்கள் பாதிப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

பால் கம்பனிகள், ஒரு லீற்றர் பாலை 65, 70 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதால், தாம் பெரிதும் நட்டமடைந்துள்ளதாக, கண்டி ஹந்தானை தோட்டத்தைச் சேர்ந்த  பாற் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பாரிய தொகையை முதலீடு செய்தே, பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை எனவும் பண்ணை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாடுகளுக்கான புண்ணாக்குக்காக, பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளதாகவும் எனவே, பால் கம்பனிகள் 100 ரூபாய்க்கு பாலை கொள்வனவு செய்தால், பாற் பண்ணை தொழிலை நட்டமின்றி முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X