2024 மே 03, வெள்ளிக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகம் ; பொலிஸூக்கு 7 வருட சிறை

Mithuna   / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணம் ஆகாத 35 வயதான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை குற்றவாளியாக இனங்கண்ட நுவரெலியா மேல் நீதிமன்றம் அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது,

குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை, 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு05 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை,  நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, செவ்வாய்க்கிழமை (13) வழங்கினார். 

கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர் 35 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவரை ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். தான் கடமையில் இருந்தவேளையிலேயே இக்குற்றத்தை புரிந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் சாட்சியங்கள் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்தரான லக்க்ஷமன் சாலிய பண்டார வீரசிங்க என்பவர்  நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

அவருக்கே மேலே குறிப்பிட்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  5 லட்சம் ரூபாய் அபராத தொகை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருட சிறை தண்டனையும், தண்டப்பணம் 20 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்துக்கு செலுத்தாத பட்சத்தில் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டணையும் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .