2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பால்சேகரிப்பில் மந்த நிலை; கால்நடை வளர்ப்பாளர்கள் வாழ்வாதாரம் இழப்பு

Editorial   / 2020 மே 04 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

கொரோனா வைரஸ் தொற்றினால், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பால் விற்பனையில் ஈடுபடுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

டிக்கோயா, ஹட்டன், வட்டவளை, பொகவந்தலாவ, சாஞ்சிமலை, நோர்வூட், தலவாக்கலை-லிந்துலை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள், தினமும் கரக்கப்படும் பாலை விநியோகிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தினமும் காலை வேளையில் பாலைக் கொள்வனவு செய்வதற்கு, பால் சேகரிப்பாளர்கள் வருகை தருவார்கள் என்றும் எனினும் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து, பால்சேகரிப்பாளர்கள் வருகைத் தருவது குறைவடைந்துவிட்டதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறு வழிகளிலும் கடனைப் பெற்றே, கால்நடைகளை வாங்கி வளர்த்து வருவதாகவும் ஆனால் அண்மைக்காலமாக, பால்சேகரிக்கும் நடவடிக்கை குறைவடைந்துள்ளதால் தாம் பொளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .