2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாவனைக்குதவாத அரிசி, யோகட் கைப்பற்றப்பட்டன

R.Maheshwary   / 2022 நவம்பர் 02 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா 

பசறை சுகாதார பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, பசறை நகருக்கு கொண்டு வரப்பட்டிருந்த பாவனைக்குதவாத ஒரு ​தொகை அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கல்முனையில் இருந்து லொறியொன்றில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 10 கிலோகிராம் அரிசி மூடைகள் 100 உம் , 25 கிலோ கிராம் அரிசி மூட்டைகள் 17 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குளிரூட்டப்படாத வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட  பொதி செய்யப்பட்ட 48 யோகட்டுகள் அடங்கிய  20 பெட்டிகளும் பசறை சுகாதார பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .