Kogilavani / 2021 மே 11 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஊவா மாகாணத்தில், பின்தங்கிய பாடசாலைகளின் பெறுபேறு மட்டம் உயர்வடைந்துள்ளதாக, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல குறிப்பிட்டார்.
ஊவா மாகாணத்தில், குறிப்பிட்ட 10 கல்வி வலயங்களிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பூரண திருப்தியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில், வியலுவை கல்வி வலயம் 73.36 சதவீத பெறுபேறுகளைப் பெற்று முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார்.
மஹியங்கனை கல்வி வலயம் 71.24 சதவீத பெறுபேறுகளையும் பசறை கல்வி வலயம் 70.12%, பண்டாரவளை கல்வி வலயம் 65.18%, பதுளை கல்வி வலயம் 64.04%, பிபிலை 67.44% பெறுபேறுகளைப் பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சிறந்த பெறுபேற்றைப் பெற்ற பாடசாலைகள், தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு குறைபாடுகளுடனேயே இயங்கி வருவதாகவும் எனினும் அத்தகைய பாடசாலைகளின் மாணவர்கள் தங்களது திறமைகளை நிருபித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
44 minute ago
1 hours ago