Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
நிவித்திகல பிரதேசத்தின் பிரதான ஆறுகளை இடைமறித்து நடைபெற்றுவரும் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கை காரணமாக, பிரதேசத்தின் குடிநீர் மாசடைந்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நிவித்திகல பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் இறங்குவான கங்கை, தெல்வல கங்கை ஆகிய பிரதான ஆறுகளை இடைமறித்து, இந்தப் பாரிய இரத்தினக்கல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இப்பிரதேசத்தில் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சேற்றுத்தன்மையுடன் நீர் காணப்படுவதால், இந்த ஆறுகளில் இருந்து முன்னெடுக்கப்படும் குடிநீர்த் திட்டம் பாதிப்படைந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாரிய மரங்களும் வெட்டிச் சரிக்கப்படுவதாகவும் இதனால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago