2026 மே 09, சனிக்கிழமை

dd

’பிரதான கட்சிகளின் விஞ்ஞாபனத்தை பார்த்து த.மு.கூ முடிவு கூறும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

அரசியலில் காணப்படும் சர்ச்சைகளைத் தவிர்த்து, நிலையான அரசியல் ஸ்திரத் தன்மையுடன், தங்களுடைய கட்சிகளுடைய ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை பிரதான கட்சிகள் அறிவித்த பின்னர், நிதானமானதொரு முடிவை எடுக்க முடியும் என்று, விசேட கிராம அபிவிருத்தி அமைச்சர் வே. இரதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிரீன் விச் ஆங்கில கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் ஆங்கில கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்டி, இந்து கலாசார மண்டபத்தில், கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பரமேஸ்வரன் தலைமையில், நேற்று (31) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து, எந்தக் கட்சியும் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது கட்சியின் வேட்பாளர் யார் என்று அறிவித்திருந்தாலும் அந்த வேட்பாளருக்கு எதிராக, இன்னும் சிறது காலத்தில், வழக்குத் தொடரப்படும் என்று கூறினார்.

பெரிய கட்சிகளுக்கிடையில், யாரை வேட்பாளராகத் தெரிவு செய்யவேண்டும் என்பதிலேயே இழுபறி நிலவும் இந்நிலையில், சிறுபான்மைக் கட்சிகளான தங்களிடம், எந்தக் கட்சிக்கு ஆதரவு என்று வினவினால், அதற்கு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பதையே பதிலாகக் கூற முடியும் என்று கூறினார்.

அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு முடிந்த பின்னரே, யாருக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்பதை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .