Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத். எச்.எம்.ஹேவா
பொதுத் தேர்தலில், தமது அணியில் போட்டியிடுமாறு பிரதான இரண்டு கட்சிகளிலிருந்தும் தனக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் உப- செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன், நுவரெலியா மாவட்ட மக்களின் சார்ப்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளுக்கு இணங்கும் கட்சியுடன் மட்டுமே இணைவேன் எனத் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணனுக்கும், உப- செயலாளர் அனுஷா சந்திரசேகரனுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் நிலவுவதால், பிரதான கட்சிகள் அனுஷ்யாவுக்கு வலைவீசுவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் கேட்டபோதே, அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'பொதுத் தேர்தலில் தம்முடன் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவும் தனக்கு அழைப்பு விடுத்தார்" என்றார்.
தனது தந்தை சந்திரசேகரன், மலையக மக்களுக்காகவே மலையக மக்கள் முன்னணியை ஸ்தாபித்தாரென நினைவுகூர்ந்த அவர், ஆனால் முன்னணியில் இன்று ஜனநாயகம் இல்லையென்றும் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்பட்ட சிற்சில தீர்மானங்களுக்கு, தலைமைத்துவம் இனங்காமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், அனுஷா சந்திரசேகரன் குற்றஞ்சாட்டினார்.
'கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட தீர்மானித்தது. எனினும், இறுதியில் தலைமைத்துவம் இதனை மாற்றியது” என்றார்.
“இவ்வாறான நிலையில்தான், பொதுத் தேர்தலில் தனியாகப் போட்டியிட நான் தீர்மானித்தேன். நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு, பிரதான கட்சிகள் இரண்டும் இணங்காவிட்டால், நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவேன்” என்றார்.
மலையகத்திலுள்ள படித்த சமூகம், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் தன்னுடன் இணைந்திருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், மலையக மக்கள் முன்னணி, பல சந்தர்ப்பங்களில் சர்வாதிகாரத்துடன் செயற்படுகின்றது என்றும் இதனை எதிர்க்கும் பலர், இன்று தன்னுடன் கைக்கோர்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago