Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன்
மலையக அமைச்சர்களதும் நாடாளுமன்ற உறுப்பினர்ளினதும் பெயர்களுக்கு, களங்கம் ஏற்படுத்துவத்தும் வகையில், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகச் சாடியுள்ள விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், இதனைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், நேற்று (19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சர் பழனி திகாம்பரம், போதை பொருள் விற்பனை செய்வதாகப் பகிரங்கமாக மேடையில் கூறினார் என்றும் அதனைத் தொடர்ந்து, தற்போது பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, போதைப் பொருள் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
அவ்விருவரும் எந்த அடிப்படையில், இவ்வாறான கருத்துகளை வெளியிடுகின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சாடினார்.
அரசியல் ரீதியாக, வெவ்வேறு கொள்கைகளுடன் அல்லது தனித்தனியே பயணிக்கலாம் என்றும் அது அரசியல் என்றும் கூறிய அவர், ஆனால் மலையகப் பிரதிநிதிகளாக, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றவர்கள் என்ற வகையில், ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
மலையகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும், உண்மையிலேயே ஆதாரங்கள் இருக்குமாயின், அதனை பொலிஸாரிடம் வழங்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அதனை விடுத்து ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை, பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சாடினார்.
இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதனூடாக, சர்வதேச ரீதியாகவும் அவர்களுடைய பெயருக்குக் களங்கம் எற்படுகின்றது என்றும் எனவே சம்பந்தப்பட்டவர்கள், இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையைத் தவறுதலாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.
11 minute ago
18 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
23 minute ago
28 minute ago