Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 26 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமக்கு தேவையான பௌதீக வளங்களை உடனடியாக அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக திங்கட்கிழமை (26) அன்று தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலவாக்கலை பிரதேச செயலக அலுவலகம் தற்போது தலவாக்கலை-லிந்துலை நகர சபைக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் தலத்தில் அமைந்துள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் வளாகம் அலுவலக அதிகாரிகளுக்கு போதுமானதாக இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.
தலவாக்கலை பிரதேசத்திலுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தலவாக்கலை பிரதேச செயலகத்தினூடாக நாளாந்தம் சேவையை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் பிரதேச செயலக அலுவலகம், அதன் அதிகாரிகள் மற்றும் சேவைகளைப் பெற வரும் மக்கள் இருவருக்கும் முறையான பௌதீக வளங்கள் இல்லாததால் கடுமையான சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர் என போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மழை நாட்களில் சேவையை பெற வரும் மக்கள் நிற்கக்கூட இடமில்லாமல் பாதிக்கப்படுவதாகவும், விசேட தேவையுடையவர்கள் மேல் தலங்களுக்கு சென்று தங்கள் வேலையைச் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகப் பிரதேச செயலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் கீழ் அமைந்துள்ள கட்டிடத்தை வழங்குவதாகப் பொறுப்பான அதிகாரிகள் பல தடவைகள் கூறியிருந்தாலும், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
கீழேயுள்ள கட்டிடத்தை வழங்காவிட்டாலும் பரவாயில்லை. இங்கு அமைந்துள்ள பிரதேச செயலகத்தை நன்கு வசதிகளுடன் கூடிய வேறு இடத்தில் நிறுவுமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டமானது தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு ஊர்வலமாக தலவாக்கலை அட்டன் பிரதான வீதி வழியாக தலவாக்கலை பிரதான சுற்று வட்டம் வரை சென்று மீண்டும் அங்கிருந்து ஊர்வலமாக தலவாக்கலை பிரதேச செயலகம் வரை வந்து முடிவடைந்தது.
பி.கேதீஸ்
36 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago