2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு தொடர்பான மனு செயலாளரிடம் கையளிப்பு

R.Maheshwary   / 2022 ஜனவரி 31 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட  பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு தொடர்பிலான நியாய கோரிக்கையை முன்வைத்து,  கடந்த ஒரு மாத காலமாக  பொதுமக்கள் மனு கையெழுத்து இயக்கம் நிறைவுக்கு வரும் நிலையில், நுவரெலியா மாவட்டம் முழுவதும் நேரடியாகச் சென்று சேகரிக்கப்பட்ட மக்கள் கையெழுத்துகள் அடங்கிய மனு நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தனவிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு  நேற்றைய தினம் (31) காலை இந்த மனு கையளிக்கப்பட்டது.

  நுவரெலியா மாவட்ட முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான   மயில்வாகனம் திலகராஜாவின் வழிகாட்டலில், பிரதான அமைப்பாளர் இராமன் செந்தூரன்  நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் யோகா ஜெகநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன்,தேயிலை எம் தேசம் சார்பில் அதன் செயலாளர்
சுரேஷ்குமார், மலையக ஆசிரியர் சமூகம் சார்பாக
மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர்
ரவீந்திரன், அரசியல் செயற்பாட்டாளர்கள் சார்பில் நுவரெலயா பிரதேச சபை உறுப்பினர் அற்புதராஜா சிவில் சமூக நிறுவனங்கள் சார்பில் சாமிமலை ஹார்ட்ஸ் மோகன்,
தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் சார்பாக தொழிற்சங்கவாதி பாலசேகரன்,
மலையக சமூக சேவையாளர்கள் சார்பாக ராகலை நவரட்ணம்,
கலை இலக்கியவாதிகள் சார்பாக இளங்கவிஞர் அனுஷன்
இளைஞர் கழகங்கள் சார்பில் நுவரெலிய ஸ்மார்ட் யூத் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் வினோத் - ப்ரியன் ஆகியோரின் பங்களிப்புடன்  நுவரெலியா மாவட்ட மக்கள் சார்பாக கையளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X