2025 மே 02, வெள்ளிக்கிழமை

பிறப்பு சான்றிதழுக்கு இறப்பு சான்றிதழ்

Janu   / 2024 செப்டெம்பர் 02 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறப்பு சான்றிதழ் பெற்றுகொள்வதற்காக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு  வரும் பொது மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை வழங்குவதால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு பிறப்பு சான்றிதழ் பெற வரும் பொதுமக்களுக்கு பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கப்படுவதுடன் சிங்களத்தில் உள்ள மரணம் என்ற வார்த்தை மீது பேனாவால் கோடிட்டு  அதில் "BIRTH" என்று ஆங்கிலத்தில் எழுதி பொதுமக்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனால்  ஒரு மொழி மட்டுமே தெரிந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் பிறப்பு சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ள போகும் போது இறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தை வழங்குவதால் அசௌகரியத்திற்குள்ளாகுவதாகவும்  பொது மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலக பொறுப்பதிகாரிகளிடம் கேட்டபோது, ​​பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்த போதிலும், தேவையான விநியோகத்தை வழங்க தவறியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .