Kogilavani / 2021 ஜனவரி 24 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை சென்ஜோன்ஸ் தோட்டத்தில் தைப்பொங்கல் நிகழ்வுடன் கம்னியூட் தொழிலாளர் சங்கம் புதிய சங்கமாக உதயமானது.
சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். மோகனராஜா தலைமையில் இந்த நிகழ்வுகள் சென் ஜோன்ஸ் தோட்ட பிள்ளை பராமரிப்பு அபிவிருத்தி நிலை மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் போராதெனிய பல்கலைகழக கல்வியற் விரிவுரையாளர் டி.சற்குருநாதன், உக்வலை பிரதேச சபை உறுப்பினரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையக பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன், ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன் சமூக நீதிக்காகன மலையக வெகுஜன அமைப்பு உறுப்பினர்கள் உட்பட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வை மகேந்திரன் ஆகியோரும், தோட்ட அதிகாரிகளும் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன் புதியதாக உதயமான கம்னியூட் தொழிலாளர் சங்கம் தொடர்பில் அதன் கொள்கை விளக்கத்தை சட்டத்தரணி எஸ். மோகன்ராஜ் தனதுரையில் விளக்கினார்.
இந் நிகழ்வின் போது பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago