Editorial / 2024 ஜூன் 25 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் கட்சித் தலைமை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடைக்கால தடை விதிக்கப்பட்ட தலைவரும், அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச பிரதிநிதிகள் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இடைக்கால தடை விதிக்கப்பட்டதலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
“ஜனாதிபதி தேர்தலுக்கு வருகிறேன். நாங்கள் வெற்றி பெறுகிறோம் அதன்பிறகு, என் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் அரசியல் சாசனத்தால் ரத்து செய்யப்படும். அப்போது கட்சித் தலைமை குறித்து எந்தப் பிரச்னையும் இருக்காது. கட்சியின் தலைவர்கள் என கூறி பதவிகளை வகிப்பவர்கள் கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டியடிப்பதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். கட்சி அங்கத்தவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். 10 முதல் 12 பேர் தங்களை பலப்படுத்த கட்சியை காட்டிக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.
“தேர்தல் வந்ததும் வெவ்வேறு சின்னங்களில் அவ்வாறானவர்கள் போட்டியிடுகின்றனர். நாற்காலியில் இருந்து, வெற்றிலையில், அன்னத்தில்,, மொட்டில் இருந்து. அப்படியானால் கடந்த பத்தாண்டுகளின் சின்னங்கள் இந்தத் தேர்தலுக்குப் பிறகு பொருந்தாது. புதிய சின்னத்தை அறிமுகப்படுத்துவோம்” என்றார்.
15 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
47 minute ago
2 hours ago