Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரில், நாளை அல்லது நாளை மறுதினம் தான் கூட்டணியொன்றை பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டீ சில்வா, இக்கட்சிக்கான சின்னமாக, கதிரையைத் தெரிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கூட்டமைப்பு கதிரை சின்னத்தில் போட்டியிடுமென்றும் தெரிவித்தார்.
பதுளையில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இரண்டு கட்சிகள் என்ற ரீதியில், தாங்கள் மொட்டுடன் இணையவில்லை என்று தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தாலேயே இணைந்ததாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம், இரு கட்சிகளும் தத்தமது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago