2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புரட்டப் பாதை அபிவிருத்திக்காக ரூ. 35 மில்லியன் ஒதுக்கீடு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

புசல்லாவை - புரட்டொப் பாதையின் புனரமைப்புப் பணிக்காக, முதற்கட்டமாக, 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேற்படி பாதையானது, மிக நீண்டகாலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்ததால், பிரதேச மக்கள், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட தோட்ட மக்கள், இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பில், அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ப.திகாம்பரம் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, மேற்படி தோட்டப் பாதை புனரமைக்கப்படவுள்ளது.

இந்தப் பாதை புனரமைப்புப் பணிகளை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X