2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

புல் வெட்ட சென்றவர் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 நவம்பர் 21 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜா

நேற்று முன்தினம் (19) காணாமல் ​போன நபர் ஒருவர், இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயதான ஹொப்டன் அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த வேலு குமார் சுந்தரம்  என தெரியவந்துள்ளது.

கால்நடைகளுக்கு புல் வெட்டுவதற்கு சென்ற இவர், வீடு திரும்பாததால்  உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு தேயிலை மலைப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக லுணுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .