Editorial / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
புளியாவத்த ஹொன்சி கீழ் பிரிவு தோட்ட பகுதியில் இரண்டு வெவ்வேறு குடியிருப்புகளில் எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேற்படி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரண்டு ஏரிவாயு சிலிண்டர்கள்களும் 15 நாட்களுக்கு முன்பு கொள்வனவு செய்துள்ளதாகவும் நேற்றிரவு குறித்த சிலின்டர்களை பயன்படுத்துவதற்கு எடுத்த போது இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது, பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



14 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago