Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ. ரமேஸ், எஸ்.கணேசன்
கொத்மலை, புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில், தோட்ட முகாமையாளர், உத்தியோகத்தர் ஒருவர் மீது, தோட்டத் தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, சொத்துகள் சிலவும் சேதமடைந்துள்ளது என்றும் காயமடைந்த இருவர், கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை, அவர்களின் கணக்கில் வைப்பிலிடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பகல் தொழிலாளர்கள் குறித்த தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்டே, தொழிலாளர்கள் சிலர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தோட்ட நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதிகள் இரண்டுக்கும் வாகனங்கள் இரண்டுக்கும் கட்டடங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த 15 இலட்சம் ரூபாய் பணமும் களவாடப்பட்டுள்ளதாகவும் தோட்ட நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது.






1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago