2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பெண் கைது

Kogilavani   / 2017 ஜூன் 13 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரிக்க முற்பட்ட  மற்றுமொரு பெண்ணை, திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக, நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, எலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிப்படைந்த பெண், ஹொரவப்பத்தானயிலிருந்து ஹங்குராங்கெத்தக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவரது அருகில் வந்து அமர்ந்த மற்றுமொரு பெண், நாவுல- பொபெல்ல பிரதேசத்தில் வைத்து, மேற்படி பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரிக்க முயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பஸ்ஸில் பயணித்த ஏனைய பயணிகள் குறித்த பெண்ணை  மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .