Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
அபுதாபியிலிருந்து எல்ல பிரதேசத்துக்கு, சுற்றுலா மேற்கொண்டிருந்த 31 வயது பெண்ணை, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், எல்ல பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் ஊழியர் ஒருவரை, எல்ல பொலிஸார் இன்று (27) காலை கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை, அம்பதண்டேகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எல்ல பிரதேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக, ஹோட்டலிலிருந்து வெளியேறிய மேற்படி பெண்ணை, முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டுசென்ற அந்நபர், முச்சக்கர வண்டியை இடையில் நிறுத்திவிட்டு, பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.
அந்நபரின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த நபரைக் கைதுசெய்துள்ளனர்.
ஹோட்டலுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியையே, மேற்படி நபர், ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியாமல் செலுத்திச் சென்றுள்ளாரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
31 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
34 minute ago
2 hours ago