2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு பெண்களை அழைத்துவந்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவர் உட்பட இருவரை, 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜயசேகர, இன்று (30) உத்தரவிட்டார்.

மஹரகமயைச் சேர்ந்த 45 வயது பெண்ணொருவரும் பதுளையைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹரகமயைச் சேர்ந்த குறித்த பெண், வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியாவுக்கு பெண்களை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார் என்று பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

இந்நிலையில் நுவரெலியா சுற்றுவட்டச் சந்தியில் வைத்து, வான் ஒன்றில் வந்து இறங்கிய மேற்படி பெண்ணையும் பதுளையை சேர்ந்த யுவதியையும் விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், அவ்விருவரும் விபசார நடவக்கைகளுக்காக வந்துள்ளனர் என்பதை அறிந்துகொண்டு கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .