2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பெயர் பலகை விவகாரம்; பதுளையிலும் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில், தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளை நகர், சைமன் பீரிஸ் மலர்சாலைக்கு முன்பாக, இன்று(31) பிற்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்கள், சுமார் 100க்கும் மேற்பட்டோர்  இந்த ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேற்படி பயிற்சி நிலையத்தில், தொண்டமானின் பெயரை நீக்கிவிட்டு பூல்பேங்க் தொழில் பயிற்சி நிலையம் என பெயர்மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், இந்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சௌமியமூர்த்தி தொண்டாமனின் உருவப்படமும் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மலையகத்தின் தந்தையென போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்தை நீக்கியமையைக் கண்டிப்பதாகவும், மீண்டும் அவரின் பெயரைச் சூட்டவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோர் கோஷம் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .