Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் அல்லாத தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு, மாற்றம் செய்யப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஜி. அபேசிங்க பண்டாவால், பாடசாலைகளுக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு அமைய, ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு, பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதியுடன், கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி மூலம், ஊவா மாகாணத்தில் உள்ள 143 தமிழ் மொழிப் பாடசாலைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.
இந்நிலையிலேயே, மாற்றம் செய்யப்பட்ட பெயர்கள் தொடர்பாக, பாடசாலைகளுக்குக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பதுளை மாவட்டத்தில், இயங்கும் பதுளை, வியலுவ, பண்டாரவளை, பசறை, வெலிமடை ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 133 தமிழ் மொழிமூல பாடசாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் இயங்கும் மொனராகலை, பிபிலை கல்வி வலயங்களிலுள்ள 10 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும், பெயர் மாற்றம் பெற்று இயங்கவுள்ளன.
இதற்கு முன்னர், பெரும்பாலான தமிழ்ப் பாடசாலைகள் அமைந்துள்ள ஊர்ப் பெயர்களிலும் ஒரே ஊரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகள், அதே ஊரின் பெயரில் இலக்கம் 1,2,3 என அடையாளப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக பாடசாலைகளின் வளப் பகிர்வு, அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களை அதிகாரிகள் எதிர்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago