Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நாட்டை பல அரசாங்கங்கள் ஆட்சிசெய்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மட்டுமே, பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்காக மில்லியன் கணக்கிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஹட்டன் மல்லியப்பூ தோட்டத்தில் அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய 20 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கொங்ரீட் பாதையை மக்களின் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், திகாம்பரம் போன்று வேறு எந்த அமைச்சரும் மலையகத்துக்கு மில்லியன் கணக்கான நிதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும் அது அமைச்சரின் தனித்திறமை என்றும் தெரிவித்ததுடன், பலர் தாத்தா வழி பேரன் வழி என்று சொல்லலாம் ஆனால் ஓர் அரசாங்கத்தில் இருந்து கொண்டு சரியான முறையில் தோட்ட மக்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுத்து அபிவிருத்திகளை சரியான முறையில் செய்பவர் தலைவர் திகாம்பரத்தைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் தெரிவித்தார்.
தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டு இருப்பதாகவும் மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூடிய முக்கியத் தலைவராக அமைச்சர் திகாம்பரம் செயற்படுவார் என்றும் தெரிவித்ததுடன், அவர் யாருக்கு கையை நீட்டுகிறாரோ அவர் யாரை காட்டுகிறாரோ அவருக்கு மக்கள் வாக்களிப்பதற்குக் காத்துக்கொண்டு இருப்பதாகவும்
தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago