Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே.குமார்
பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகார அடாவடி நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் தீபாவளி பண்டிகைக்கு பின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
தோட்ட நிர்வாகங்கள் தோட்டங்களை பொறுப்பேற்ற காலத்திலுள்ள நிலைமை தற்போது முழுமையாக மாற்ற மடைந்துள்ளது. தோட்ட நிர்வாகங்களின் எல்லையற்ற அதிகாரங்களின் காரணமாக தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதனால் தோட்ட நிர்வாகிகள் தமது அதிகார எல்லையை தேயிலை பயிரிடப்பட்ட நிலங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தகூடாது.
தற்போது தோட்டங்களில் குடியிருப்பாளர்களாக வாழ்கின்றவர்களில் சுமார் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தோட்டங்களில் வேலை செய்யாதவர்களாக இருக்கின்றனர்.
இவர்களின் நலன்கள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் அக்கறை செலுத்துவதில்லை. தோட்டங்களில் வேலை செய்யாத தோட்ட குடியிருப்பாளர்கள் தமது வாழ்வாதாரங்களை கொண்டு நடத்துவதற்கு சுயத்தொழில் செய்வதற்கு முற்படுகின்ற போது பல்வேறு இடையூறுகளை தோட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்துவதுடன், அதற்கு தடையாகவும் இருக்கின்றன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago