2026 ஜனவரி 21, புதன்கிழமை

’பெருந்தோட்ட கர்ப்பிணிகள் குறித்து கவனம் செலுத்தவும்’

Kogilavani   / 2021 மே 13 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் கர்ப்பிணிகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஸ் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கமைய, அரச துறைகளில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ரீதியில், அந்தச் சலுகை பெருந்தோட்டங்களில் பணிப்புரியும் கர்ப்பிணிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X