Editorial / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
5000 ரூபாய் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களை உரியமுறையில் சென்றடையவில்லை எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், குறித்த பணம் சிலரது கட்சி ஆதரவாளர்களுக்கும் வசதி படைத்தோருக்குமே வழங்கப்படுகிறது என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
நாட்டின் தற்போதைய நிலையிலும் மலையகத்தில் வெயில் காலம் ஆரம்பித்துள்ளதால், 10 நாள்கள் வேலையே தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் தொழில் வழங்கப்படுவதால், அவர்களுக்கு மாதம் சம்பளம் குறைந்தளவே கிடைக்கின்றன. எனவே இந்த 5000 ரூபாய் என்பது எவரினதும் பொக்கட்டுகளிலிருந்து வழங்கப்படவில்லை. மாறாக இது மக்களின் என்பதால், இதனை கட்சி பேதமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அத்துடன் அரசாங்கம் இப்போது தேர்தலுக்குச் செல்வது உசிதமல்ல. கொரோனா தொற்றை ஒழித்து விட்டே தேர்தலுக்குச் செல்ல வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தைக் கூட்டி, கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். எமக்கு கொடுப்பனவுகள் வேண்டாம். நாடாளுமன்றத்தில் சாப்பாடு வேண்டாம். எதுவுமே வேண்டாம். கொரோனா ஒழிப்புக்காக எவ்வித நிபந்தனையுமின்றி ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
18 minute ago
25 minute ago
34 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
34 minute ago
54 minute ago