ஆ.ரமேஸ் / 2020 மார்ச் 25 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலுள்ள மக்களை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் செயலணிப் படை அமைத்து முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமை, யுனிலிவர் நிறுவத்தின் ஊடாக, மக்களுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான லைஃப்போய் சவர்க்காரக் கட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று (25) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நிதியத்தின் முன்னாள் தலைவர் பரத் அருள்சாமி தெரிவித்தார்.
இதேவேளை, பெருந்தோட்டங்களில் தேயிலை மலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு வருவதுடன், கைகளை சுத்தப்படுத்தும் திரவமும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தேயிலைத் தொழிற்சாலை வளாகம், தொழிலாளர் குடியிறுப்புப் பிரதேசம் ஆகியவற்றில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கு, இரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான மருந்துகள், தோட்டவாரியாக கையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், செயலணிப் படையிலுள்ள இளைஞர், யுவதிகள், தோட்டங்களில் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago