Editorial / 2020 மே 13 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொவிட்-19 சூழலிலும் தொடர்ந்து இயங்கும் பெருந்தோட்டத்துறையில் “அவுட்குரோவர்” முறைமையை உட்புகுத்த பெருந்தோட்டக் கம்பனிகள் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழில் அமைச்சர் தினேஸ் குணவர்தன அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப்பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (13) விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள விடயம், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குரிய இருந்துவந்த நிலையில், “அவுட்குரோவர்” முறையை நடைமுறைப்படுத்தி, தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற முன்மொழிவை, கம்பனிகள் செய்து வந்துள்ளன என்றும் கூட்டு ஒப்பந்தத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதான சரத்துகளும் சேர்க்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.
நிலம் தொடர்பான எவ்வித உறுதியான உடன்பாடுகள் ஏதுமின்றி கூட்டு ஒப்பந்தத்தில், அந்த சரத்து உள்வாங்கப்பட்டமை தொடர்பில் தான் பலமுறை நாடாளுமன்றத்திலும் விவாதித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொவிட்-19 நெருக்கடியில், சமூக இடைவெளியைப் பேணும் வகையில், குறிப்பிட்ட தேயிலை மரங்களை ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களை வேலை செய்யக்கோரும் அவுட்குரோவர் முறைமையை அமல்படுத்த, ஹொரண பிளாண்டேசன் முயற்சி மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா - சாமிமலைப் பகுதி தொழிலாளர்கள் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவுட்குரோவர் முறை பின்பற்றப்படுவதால், தொழில் உரிமைகளான ஊழியர் சேமலாபநிதி, நம்பிக்கை நிதி, சேவைக்காலப்பணம் முதலான விடயங்களில் தொழில் சட்ட ஏற்பாடுகள் மீறப்படும் நிலைமை தோன்றும் என்பதை தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago