Editorial / 2020 மே 10 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பெருந்தோட்டப்பகுதிகளில் கொரோனா நோயாளி எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில், கொவிட்-19ஐ இல்லாதொழிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
கொவிட் – 19 பரவுவதைக்கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடு நடவடிக்கையாக, நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ, பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிகிச்சைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொவிட்-19 தொற்று அறிகுறிகளுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில், அது குறித்து செயற்பட வேண்டிய விதம் குறித்து, நோய் காவுவண்டி சாரதிகள், தோட்ட நலன்புரி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வும் விளக்கமும் வழங்கும் நிகழ்வு, அமைச்சர் தொண்டமான் தலைமையில், இன்று (10) சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஏற்கெனவே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலையகத்துக்கு வந்துள்ளனர் என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் மேலும் 1,500 பேர் வரை வரவுள்ளனர் என்றும் அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கமையவே இவர்கள் வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
குறித்த 1,500 பேரும், ஏற்கெனவே 14 நாள்களுக்கு மேலாக கொழும்பில் தனிமையில் இருந்த நிலையிலேயே வருகின்றனர் என்றும் அதனால், எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
பொதுசுகாதார அதிகாரிகள், ஒவ்வொரு தோட்டத்துக்கும் செல்வது கடினம் என்பதாலேயே, தோட்டத்திலுள்ள சுகாதார அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளதாகவும் இப்பணியை முன்னெடுக்க யாரம் பயப்படதேவையில்லை என்றும் கூறினார்.
நாளை (12), சுகாதார அமைச்சர், மலையத்துக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்த அவர், பெருந்தோட்ட மக்களை, கொவிட்-19 பாதிப்பில் இருந்து காப்பாற்றவேண்டும் என்பதில், அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
எனவே, சுகாதார அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு தான் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026