Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 29 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு, இரண்டு ஏக்கர் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்காக, விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்று (28) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், அமைச்சர் கயந்த கருணாதிலக்க¸ விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்¸ நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா¸ கே.கே.பியதாச¸ வேலுகுமார் மற்றும் 22 பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக, இரண்டு ஏக்கர் காணியைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்காக, கல்வி அமைச்சு, காணி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்டக் கம்பனிகள் உள்ளடங்கும் வகையில், குழு ஒன்றை அமைப்பதற்கும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் வகையில், நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பாக விசேட பிரதேசங்களுக்கான அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும் ஊவா மாகாணத்துக்குப் பொறுப்பாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்¸ சப்ரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவும், கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதனடிப்படையில், எதிர்வரும் ஜூன், ஜூலை மாதமளவில், பாடசாலைகளுக்குக் காணிகள் கையளிக்கப்படும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இது தேசிய நிகழ்வாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
40 minute ago
49 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
2 hours ago
9 hours ago