2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பேராதனை பல்கலைக்குள் கொரோனா

Freelancer   / 2022 ஜனவரி 29 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இவர்கள் தற்சமயம் கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்காக முழுமையாக திறக்க முடியாது. தற்பொழுது சுகாதார வழிகாட்டுதலின் கீழ் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக நடைமுறை பயிற்சி மற்றும் பரீட்சை என்பவைகளுக்காக சுமார் 4,400 மாணவர்கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். இன்னும் சில மாணவர்கள் ஒன்லைனில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

மேலும் தற்பொழுது சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X