Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகைத் தந்த, பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் அவசர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணி மற்றுமொரு பெண்ணுடன் நேற்று (05) கண்டிக்கு வந்து காலை 10.30 மணியளவில் பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்த போது, சுகயீனம் காரணமாக உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
49 minute ago