R.Maheshwary / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், இன்று அதிகாலை தொடக்கம் காணாமல் போயுள்ளார் என, மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு பொறுப்பானவரால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான புலஸ்தி பிரமுதித் பெரேரா என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணிக்கு குறித்த மாணவன் பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் வெளியேறும் முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதமும் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
மாணவனைத் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago