Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 29 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பேரிடர்களை குறைக்கும் வகையில், கவனமாக
செயல்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (28) நடைபெற்ற நுவரெலியா மாட்ட
பேரிடர்முகாமைத்துவ குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே,
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், அனர்த்தம் ஏற்பட்டால் தொற்றுநோய் நிலைமையை முகாமைத்துவம் செய்து, அதனை வெற்றிகரமாகக் கையாள்வதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
வடகிழக்கு பருவ மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை மற்றும்
ஹங்குரன்கெத்த பிரதேசங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்த பாதிப்பில் இருந்து மக்களை
பாதுகாக்க நாம் முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு செயல்படவேண்டும்.என மாவட்ட செயலாளர் கூறினார்.
இந் நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் சுஜீவ போதிமான, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்களும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago