2025 மே 15, வியாழக்கிழமை

பேஸ்புக் நண்பன் திருட்டில் சிக்கினார்

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கபரகலைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.

பேஸ்புக் ஊடாக  பழகி நண்பர்களான இருவர், வத்தளை மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகளில் இருந்து அங்கு வருகைதந்துள்ளனர்..

கபரகலை பகுதியை சுற்றி பார்வையிட செல்வதற்கு முன்னர் அங்கு கூடாரம் ஒன்றை அமைத்து, அவர்களுடைய முக்கியமான பொருட்களை அங்கு வைத்து விட்டு  சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்,
திரும்பி வந்து பார்த்தபோது, வத்தளைச் சேர்ந்தவரின் தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தது.
பல இடங்களில் தேடி பார்த்தபோதும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பில், குறுந்துவத்த பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பலாங்கொடை பகுதியில் இருந்து வந்தவரின் பாதணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தின் ஆஜர் செய்வதற்க்கான நடவடிக்கைகள் குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர், R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .