Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையத்துக்கு, உரிய வைத்தியர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாமையால், குறித்த பிரிவு, சுமார் ஒன்றரை வருடகாலமாக மூடப்பட்டுள்ளதென, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தினமும் சுமார் 25க்கும் மேற்பட்ட நோயாளர்கள், பற் சிகிச்சை நிலையத்துக்கு வந்து, சிகிச்சை பெறாமலேயே வீடு திரும்புகின்றனர் என்றும், பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரியவிடம் வினவியபோது, வைத்தியர் ஒருவரின்மையால், நீண்ட காலமாக இந்நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே கடமையாற்றிய வைத்தியர், இடமாற்றம் பெற்றுச்சென்ற பிறகு, இதுவரையிலும் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில், மாவட்டச் சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago